நிறுத்தாமல் அடிக்கும் அமெரிக்கா; மெயின் சுவிட்சில் கை வைத்த ஈரான்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அமெரிக்கா தொடர்ந்து 9-வது முறையாக ஈரான் மீது
வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் பயங்கர வெடிவிபத்துக்குள்ளாகி, நகர முடியாமல் முடங்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்த சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
19 06 2026
இந்த புதிய மோதல்களில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
source https://tamil.indianexpress.com/international/not-a-single-drop-of-oil-can-leave-iran-issues-a-stark-warning-12180086





