21 07 2026
/indian-express-tamil/media/media_files/2026/07/21/puducherry-congress-2-2026-07-21-23-47-07.jpg)
மோடி அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மோடி அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், நீட் முறைகேடு குறித்துப் பிரதமரிடம் முறையிடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 125 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காவல்துறையினர் கைது செய்ததற்குப் புதுச்சேரியில் வலுத்த கண்டனம் எழுந்துள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் பாராளுமன்ற மக்களவை உறுப்பினரும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வைத்திலிங்கம் இன்று (21.07.2026) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுடெல்லியில், மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், நீட் முறைகேட்டிற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்றைய தினம் (21.07.2026) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 125 பேர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் தலைமையில் பிரதமரை சந்தித்து முறையிடுவதற்காக பிரதமர் இல்லம் நோக்கிச் சென்று, வாயில் எதிரே அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எந்த உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் எந்த தெளிவான உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.
இதன் முழுப் பொறுப்பையும் ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும்.
பிரதமர் இல்லத்தின் எதிரே அமைதியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 125 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்து, வேறு இடத்திற்கு அழைத்துச் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், நாட்டின் தேர்வு முறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும், நீட் முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய கல்வித்துறை அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாத வகையில் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-congress-mps-arrested-neet-scam-protest-mp-vaithilingam-demands-resignation-12185968





