திங்கள், 27 ஜூலை, 2026

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-public-examinations-bill-2026-jitendra-singh-parliament-tamil-nadu-temperature-rise-commonwealth-games-2026-india-12200426

  • Jul 27, 2026 13:02 IST

    வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு

    சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாகத் தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மு.க.ஸ்டாலின் தனது சொத்து விவரங்களையும், 'திமுக அறக்கட்டளை' தலைவராகத் தான் பொறுப்பில் இருக்கும் விவரத்தையும் வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொளத்தூர் தொகுதித் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரும் இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.