திங்கள், 20 ஜூலை, 2026

எம்.எல்.ஏ அதிரடி கைது

 

19 7 2026

DMK Markand1

முதல்வர் விஜய் குறித்து அவதூறு, ஒருமையில் மற்றும் மிரட்டும் வகையில் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ மார்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், பேசும்போது இவ்வளவு கேவலமான ஒரு முதலமைச்சரை தமிழகம் மட்டும் அல்ல இந்திய வரலாறே கண்டது கிடையாது. தேர்தல் வெற்றி பெற்று தான் தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டுமா என்றால் உறுதியாக இல்லை. அடுத்த தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் நடிகர் விஜய் தோற்று அவன் கட்சியும் தோற்றுப்போகும். மக்கள் மத்தயில் ஓட்டு வாங்க முடியாது. 

சட்டமன்றத்தில் உங்க அப்பாவை தேடுகிறேன் என்று சொல்கிறானே மானம்கெட்ட தமிழ்நாட்டில் முதலமைச்சர், என்னை சட்டமன்றத்திற்கு நுழைந்து பாத்துக்கிறோம் டா, சட்டமன்றத்தை பூட்டுவோம் என்று சொல்கிறான், பூட்டினால் எலும்பு இருக்காது. உடைத்து தான் உன்னை அனுப்பிவிடுவார்கள். கரூரில் இருந்து நீ ஓடினாய், நாங்கள் ஒன்றும் பயந்து ஓடவில்லை. தமிழ்நாட்டின் முதல்வர் பேய் அடித்தது போன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். 

நீ என்னடா கொத்து பரோட்டா போடுகிறாய், உன்னை மாதிரி ஆயிரக்கணக்கான கொத்து பரோட்டாங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனது ஆட்சியில் 3 வயது சிறுமி முதல் 90 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஊழலின் மொத்த உருவம் விஜய். அரசாங்க ஊழியர்கள், உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தை மொத்தமாக கொடுக்கும்போது விஜய் ஆட்சி வரைக்கும் வேண்டாம் என்று சொல்விடுங்கள். இல்லை என்றால் இந்த ஆட்சியில் உங்களை பாதுகாப்பு இல்லாமல் கொலை செய்வதற்கு, அங்கங்க விஜய் கட்சிக்காரன் ரெடி ஆகிவிட்டான்.


மானம் கெட்ட தகுதி இல்லாதவர்கள் எல்லாம் இவன் கட்சியில் இருக்கிறார்கள். அடுத்த நாள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை முதல்வருக்கு கிடையாது. மானம்கெட்ட அமைச்சர்களை வைத்திருக்கிறான். எங்கள் தலைவர்களை அவமரியாதை செய்தால் உன்னை அடித்து விரட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம். எந்த இடத்தில் எது பேசினாலும் அடிப்போம் என்று பேசியிருந்தார். இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவரை தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வர உள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vilathikulam-mla-markandeyan-arrested-on-threatening-remarks-against-cm-vijay-12179967