பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் இ.சி.இ எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிக்க விரும்பினால் எந்த இன்ஜினியரிங் கல்லூரிகளை சாய்ஸ் லிஸ்ட்டில் கொடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று நிறைவடைந்து, ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டாம் சுற்று தொடங்க உள்ளது.
இந்தநிலையில், மாணவர்கள் பெரிதும் எலட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை படிக்க இரண்டாம் சுற்றில் தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்பதை கல்வி ஆலோசகர் விளக்கியுள்ளார்.
எதிர்பார்த்தது போலவே ரவுண்ட் 1ல் மாணவர்கள் இ.சி.இ படிப்பை அதிகமாக விரும்பி எடுத்துள்ளனர். டாப் கல்லூரிகளில் சில இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.
டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்
1). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், திருவள்ளூர்
2). டானிஷ் அகமது காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
3). சாரநாதன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருச்சி
4). பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, காஞ்சிபுரம்
5). அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்
6). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
7). ஜே.சி.டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
8). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
9). மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
10). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
11). அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, சிதம்பரம்
12). தனலட்சுமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
13). எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
14). ரத்தினம் டெக்னிக்கல் கேம்பஸ், கோவை
15). கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
16). செயிண்ட் சேவியர் கத்தோலிக் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கன்னியாகுமரி
17). வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
18). கே.ராமகிருஷ்ணன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருச்சி
19). பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கன்னியாகுமரி
20). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர்
21). சி.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கடலூர்
22). நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
23). ஜேப்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
24). காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, திருப்பூர்
25). வேல் டெக் மல்டி டெக், திருவள்ளூர்
26). கே.சி.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
27). ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
28). பல்கலைக்கழக உறுப்பு வி.ஓ.சி பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி
29). ஜேப்பியர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
30). ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2026-best-engineering-colleges-list-anna-university-in-tamil-nadu-for-ece-electronics-communication-12205491





