வெள்ளி, 31 ஜூலை, 2026

கர்நாடகாவில் ஷாக்;

 


30 07 2026

Medical tests for women after 30 guide | Preventive health checkup for women over 30 | 30 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு அவசியமான மருத்துவ பரிசோதனைகள் | பெண்கள் சுகாதார பரிசோதனை வழிகாட்டி

கர்நாடக மாநிலத்தில் இளைஞர்களிடையே எச்ஐவி (HIV) தொற்று அதிகரித்து வருவதாக எழுந்துள்ள கவலைக்கிடமான சூழ்நிலையை தொடர்ந்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் மற்றும் fகலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒருங்கிணைந்த சுகாதார முகாம்கள் (Integrated Health Camps - IHC) நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம்களில் எச்ஐவி பரிசோதனை, ஆரம்பகட்ட பரிசோதனை (Screening) மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விஸ்வேஸ்வரயா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கல்வித் துறையும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 7,000 இளைஞர்களுக்கு சமீபத்தில் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்ற தகவல்கள் சில ஊடகங்களில் வெளியாகின.

இதை மறுத்துள்ள திட்டவட்டமாக கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் "கர்நாடகாவில் 7,000 மாணவர்கள் எச்ஐவி பாதிப்புடன் வாழ்கின்றனர்" என்ற தகவலும், "கல்லூரிகளில் எச்ஐவி பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்ற செய்தியும் தவறானவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா கூறுகையில், மாணவர்கள், இல்லத்தரசிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் என தனித்தனி பிரிவுகளின் அடிப்படையில் எச்ஐவி தொடர்பான தரவுகளை தாங்கள் பராமரிப்பதில்லை. எனவே, மாணவர்கள் மட்டுமே எத்தனை பேர் எச்ஐவி பாதிப்புடன் உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்றும் விளக்கினார்.

மேலும், 2004 முதல் இதுவரை 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 39,000 பேருக்கு மொத்தமாக எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 7,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், கல்லூரிகளில் விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம்கள் நடத்துவது கட்டாயமாக இருந்தாலும், மாணவர்களின் முழுமையான ஒப்புதல் இல்லாமல் யாருக்கும் எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்படாது என்று கர்நாடக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் எச்ஐவி பாதிப்புடன் வாழும் மக்களின் எண்ணிக்கையில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அறிக்கையின்படி, கர்நாடகாவில் சுமார் 2.60 லட்சம் பேர் எச்ஐவி பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2.05 லட்சம் பேர் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், சுமார் 54,000 பேருக்கு தங்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பதே இன்னும் தெரியாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்ஐவி பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்த வயதுப் பிரிவில் எச்ஐவி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் 44,500 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 66,600 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மொபிலிசேஷன் ஃபார் எய்ட்ஸ் சுரக்ஷா ("Mobilisation for AIDS Suraksha (MAS)") என்ற விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்த கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் "95-95-99" இலக்குகளை எட்டுவதாகும்.

அதில் முதல் இலக்காக, எச்ஐவி பாதிப்புடன் வாழும் 95 சதவீத மக்களுக்கு தங்களின் உடல்நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமானதாகும். இரண்டாவது இலக்காக, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சையுடன் இணைப்பதும், மூன்றாவது இலக்காக வைரஸ் பரவலை 99 சதவீதம் கட்டுப்படுத்துவதும் நோக்கமாக உள்ளது.

இந்த முயற்சிக்கு ஆதரவாக, மாணவர்கள் தங்களின் நடத்தை மற்றும் ஆபத்து தொடர்பான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ரகசியமாக தங்களின் எச்ஐவி பாதிப்பு அபாயத்தை மதிப்பிடும் QR குறியீடு (QR Code) அடிப்படையிலான எச்.ஐ.வி செல்ப் ரிஸ்க் அசைன்மெண்ட் டூல் (HIV Self-Risk Assessment Tool) கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் வசதி மூலம், தனியுரிமை பாதுகாக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்களின் எச்ஐவி அபாயத்தை தாங்களே மதிப்பீடு செய்து, தேவையான நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எச்ஐவி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் மத்திய கல்வி அமைச்சகமும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

source https://tamil.indianexpress.com/india/karnataka-state-hiv-test-for-college-students-update-in-tamil-12213339