செவ்வாய், 21 ஜூலை, 2026

ஊழலில் உச்சம் தொட்ட

ஊழலுக்கு எதிராகப் பேசி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தற்போது அதிமுக-வைச் சேர்ந்த ஊழல்வாதிகளைத் தன் கட்சியில் இணைத்துக் கொள்வது அவரது லட்சியத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்; தயவு செய்து கவனமாக இருங்கள்" என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, குட்கா வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்திருப்பது, நேர்மையான ஆட்சி தருவேன் என்ற விஜயின் வார்த்தைக்கே சேதாரத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் சாடியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/ex-ias-sagayam-warns-cm-vijay-over-former-admk-minister-vijayabaskar-joining-tvk-party-12182828 


தமிழக முதலமைச்சராக பதவியேற்ற சி.ஜோசப் விஜய் ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் செய்பவர்களையும் விட மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும், ஏற்கனவே ஊழல் செய்தவர்களையும் விடமாட்டேன் என்று விஜய் கூறியிருந்தால் விஜயின் இந்த பேச்சு மக்களுடைய பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்று சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். 

அப்படி, ஊழலுக்கு எதிராக பேசிய முதலமைச்சர் விஜய் அ.தி.மு.க-விலிருந்து சில ஊழல்வாதிகளை தமது கட்சியில் இணைத்து இருப்பது என்பது எந்த வகையில் ஏற்கக் கூடியது? அவ்வாறு சேர்ப்பதால் விஜயின் லட்சியமான ஊழலை ஒழிப்பேன், ஊழல்வாதிகளை தண்டிப்பேன், ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்யவும் விடமாட்டேன் செய்தவர்களையும் விடமாட்டேன் என்று கூறிவிட்டு இவ்வளவு பெரிய ஊழல்வாதிகளை சேர்த்தால் என்ன ஆகும்” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் லஞ்சத்தை ஒழிப்பேன், பொதுப்பணத்தை தொட மாட்டேன், பொதுப் பணட் தொட்டவர்களையும் விடமாட்டேன் என்றெல்லாம் பேசியது மக்களிடையே பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. ஆனால். இன்றைக்கு முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் குறிப்பாக புதுக்கோட்டை விஜயபாஸ்கர் அவர் மீது பல ஊர்கள் வழக்குகள் தொடர்ந்து இருக்கிறது, அவர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார், அவருக்கு எதிராக குட்கா வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருக்கிறது. அதேபோல, அவர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த நிலை எல்லாம் இருக்கிறது. ஊழலின் உச்சம் தொட்டவராகத் தான் அவர் கருதப்படுகிறார். பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்றதும் கூட வாக்காளர்களுக்கு 2000, 3000 ரூபாய் என்று லஞ்சம் அளித்து அதன் மூலம் வெற்றி பெற்று இருக்கிறார். ஊழலால் அவர் பெருந்தொகையை சேர்த்து இருப்பதாக அறியப்படுகிறார். புதுக்கோட்டையில் அவர் பல கல்குவாரிகளை சட்ட விதிகளை மீறி நடத்துவதாக புகார்கள் வருகின்றன. அது உண்மை.


பெரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அவரைப் போன்றவர்களை எல்லாம் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்வது என்பது விஜய்க்கு ஒரு பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. நேர்மையான ஆட்சி அளிப்பேன் என்று சொல்லக்கூடிய விஜயின் வார்த்தைக்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற நிலை இருக்கிறது. இவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்து இருக்கக் கூடாது, உண்மையில் சொல்லப்போனால் ஊழலின் உச்சம் தொட்ட அ.தி.மு.க அமைச்சர்களை எல்லாம் சேர்த்து இருக்கக் கூடாது என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.