புதன், 11 மே, 2016

அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள ஷரத்து 32-ஐ உச்சநீதிமன்றம் விசாலமாக்கி பொது மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, நீதிமன்றத்தை அனுகுவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கத் தொடங்கியது. இந்த சமூகத்தில் உள்ள எந்த ஒரு நபரும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அரசியலமைப்புச்சட்டத்தில் சொல்லப்பட்ட உரிமைகள் மீறப்படும் போது நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் அவர்களுக்கு சமூக பொருளாதார காரணம் தடையாக இருக்கக்கூடாது என என உச்சநீதிமன்றம் நீதியின் கதவுகளை திறந்து வைத்து முதன்முதலில் 'பொது நலன்' என்றவார்த்தைக்கு விளக்கமளித்தது. (எஸ்.பி.குப்தா-எதிர்-மத்திய அரசு (1982 (2) எஸ்.சி.ஆர். 365).
பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் ஆரம்ப காலகட்டத்தில் நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் பி.என். பகவதி ஆகிய இருவரும் அதிகளவில் ஏற்றுக்கொண்டு விசாரித்தார்கள். மக்கள் தங்களின் பிரச்சனைகளளை தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு ஏற்றவகையில் நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் எளிமையாக்கபட்டது. ஒரு தந்தி அல்லது ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பினால் கூட அதனை வழக்காக எடுத்துக்கொள்ளும் 'இபிஸ்லோட்டரி ஐPரிஸ்டிக்ஸன்'; முறையை உச்சநீதிமன்றம் புது நடைமுறையாக்கியது. பொதுநல வழக்கின் தேவையை முதன் முதலில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அதிகம் வலியுறுத்தி வந்தபோதும், பொதுநலன் வழக்கினை பல்வேறு வகையில் எளிய முறையில் வடிவமைத்த பெருமை பி.என். பகவதியை சேரும். ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்குகோ அடிப்படை உரிமை மீறப்படும் போது, பாதிக்கப்பட்டவர்தான்; நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை; பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் பொது நல வழக்குத் தொடராலாம் என்றும் நீதிமன்றத்தினை அனுகுவதற்கு ஏழ்மை மற்றும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என பந்துவா முத்த மோர்ச்சா வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.(பந்துவா முக்தி மோர்ச்சா –எதிர்-மத்திய அரசு(1984(3)எஸ்.சி.சி.161)).