கட்டுமானத் துறையை முறைப்படுத்துவதற்கான ரியல் எஸ்டேட் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தச் சட்டத்தை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டடங்களை கட்டி முடிப்பதை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. காலக்கெடுவுக்குள் முடிக்கத் தவறும் நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான திட்டங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க தீர்ப்பாயம் ஏற்படுத்தவும் சட்டம் வகை செய்கிறது.