நான் என் ஆய்வில் உருவாக்கி உள்ள மாதிரி
எதிர்கால சுற்று சூழல் பாதிக்காத அதிக மின்சாரம் செலவில்லாத
ஏர் கண்டிசனர் இதை பிரிட்ஜ் ஆகவும் பயன் படுத்தலாம்
இதில் கம்பரசர் இல்லை சுற்று சூழலை பாதிக்கும் குளரோ புளோரோ கார்பன்
என்ற ரசாயனம் கிடையாது இதனை எங்கும் பயன் பாடுத்தலாம் வாகனங்களுக்கு
இதனை பயன் படுத்தும் போது எரிபொருள் அதிகமாக செலவு செய்ய வேண்டியது
இல்லை சாதரணமா பயணம் செய்வது மாதிரிதான் அதிக வெப்பத்தில் பணியில் இருப்பவர்களுக்கு ac சூட் தயரித்து அணிந்து
வேலை செய்யலாம் மற்றும் ஹெல்மட்களில் அமைத்து கொள்ளலாம் மருத்துவ துறையில் மருந்துக்களை ஒரு இடத்தில இருந்து மற்றோர் இடத்துக்கு இதன் மூலம் சுலபமாக கொண்டு சென்று உயிர்களை காப்பற்றலாம்
இது இயங்குவதற்கு 12 வோல்ட் dc மின்சாரம் இருந்தால் போதும் இது சூரிய ஒளி தகடு மூலமும் இயங்கும் பேட்டரி மூலமும் இயங்கும் இது செமிகண்டக்டர் சாதனம் ஆகும் இதற்க்கு வெப்ப மின் விளைவு ..தெர்மோ எலெக்ட்ரிக் விளைவு (thermo electric effect) என்ற பெயர் இந்த செமிகண்டக்டர் சாதனம் 1821 ம் வருடம் விஞ்ஞானி தாமஸ் ஜான் சீபெக் என்பவரால் இரு வெவ்வேறு கடத்திகள் (conductors)மூலம் வெப்பம் மற்றும் குளிர்ச்சியை கொடுத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நிருபித்தார் இதற்க்கு தாம்சன் விளைவு ,சீபெக் விளைவு ,என்று அழைத்தனர்
அதே போல் 1834ம் வருடம் விஞ்ஞானி ஜீன் கார்லஸ் அத்தன்சே பெல்டியர் இந்த செமிகண்டக்டர் சாதனத்தை ரிவர்ஸ் எஞ்சினீரிங் முறையில் இரு வெவ்வேறு கடத்திகளுக்கு மின்சாரம் செலுத்திய போது அந்த சாதனம் ஒரு பக்கம் குளிர்ச்சியை
தந்தது மறுபக்கம் வெப்பத்தை தந்தது இதற்க்கு பெல்டியர் விளைவு என்று அழைத்தனர் இப்ப thermo energy cooler என்ற பெயர் (tec)
இருநூறு வருடங்களுக்கு முந்தைய கண்டுபிடிப்பு சந்தைக்கு வர வாய்ப்பு இல்லாமல் போனது காரணம் விலை ரொம்ப அதிகமுங்கோ காரணம் அதில் பயன் படுத்த பட்டுள்ள மூல பொருட்கள் விலை அதிகம்
இதில் பயன் படுத்த பட்டுள்ள மூலபொருட்களின் பெயர்கள்
1 .பிஸ்மத் டெல்லுரைட் (Bi2TE3)
2 .லெட் டெல்லுரைட் (pbte)
3 சிலிகான் ஜெர்மனியும் (si ge )
இந்த மூன்று மூலபொருட்கள் நெசமாலுமே விலை அதிகம் தானுங்கோ அப்புறம் எப்படிங்கோ மார்கெட்ல வரும்
இப்பவும் இந்த சாதனம் நெறைய தயாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க கொஞ்சம் விலையும்
கொறஞ்சமாதிரி இருக்கு இன்னும் குறையணும் அதனால மக்களுக்கு விலை குறைவான அதாவது கை விசிறி விலைக்கு ac கிடைக்கும் மண்பானை விலைக்கு பிரிட்ஜ் கிடைக்கும்
சரி விசயத்துக்கு வருவோம் இப்ப நான் தயாரித்து உள்ள இந்த ac மெசின் இதன் படங்கள் இதனுடன் பதிவேற்றி உள்ளேன் பாருங்கள் நான் கையில் வைத்து இருப்பது தான் அந்த tec கூலர் சாதனம் இதற்க்கு இரண்டு அதி வேக மின்விசிறிகள் தேவை
அதற்க்கு கம்பியுடர் கூலர் பேன்கள் மிகவும் சரியானது எல்லாமே 12 வோல்ட் டிசியில் இயங்க கூடியது மற்றும் அதனுடன் இணைந்த அலுமினிய ஹீட் சின்க் மிக முக்கியம்
ஒரு பக்கம் அறையின் வெப்ப காற்றை செலுத்தவும் மறுபக்கம் குளுமையான காற்றை வெளியேற்றவும் இந்த fan கள் பயன் படுகிறது கொடுக்கப்படும் மின்சாரம்
சரியான முறையில் இருந்தால் ஐந்து வினாடியில் _20 டிகிரிக்கு சில்லிட்டு விடும் தண்ணீரை இதன் மீது தெளித்தால் போதும் அடுத்த நிமிடம் ஐஸ் கட்டியாகி விடும்
அப்புறம் என்னங்க இருநூறு வருசமா தூங்கி கிடந்த தொழில் நுட்பம் சில நாடுகளில்
ரகசியமாக வின்வெளி ஆராய்ச்சிக்கு பயன் படுத்தி இருக்காங்க ஸ்பேஸ் சூட்டில் வைத்து
இதை யோசிச்சு பார்த்து இருக்கீங்களா சாதரணமா காற்றுள்ள பூமியில் அடிக்கிற இந்த வெயிலுக்கு ஐஸ் கட்டிகுள்ள உக்காரணும் போல இருக்கும் இதே வின் வெளியில் எப்படி அதற்க்கு வீரர்களின் (BACK PACK)பேக் பேக் கில் கூலிங் சிஷ்டத்துக்கு வழி இருக்கு அதில இதுவும் ஒன்னு இது வெப்பம் இருக்கும்போது குளிர்ச்சியாகவும்
குளிர் இருக்கும் போது வெப்பமாகவும் செயல் படும் இது போல் பனி பிரதேசங்களில் நம் ராணுவ வீரர்களுக்கு வெப்ப சூட்கள் தயாரிக்கக ஒரு திட்டமும் என்னிடம் இருக்கு அதேபோல் காற்றில் இருந்து குடி தண்ணீரை எடுத்து பயன் படுத்த முடியும்
இல்ல உங்க செல் போன் சார்ஜ் செய்யணுன்ன நீங்க ரிவர்ஸ் எஞ்சினிரிங் செய்து
அதாவது ஒரே நேரத்தில் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் இதன் மீது செலுத்தினால்
மின்சாரம் கிடைக்கும் அதனை என்னுடைய பூஸ்டிங் சர்கியுடில் இணைத்து செல் போன மற்றும் தொலை தொடர்பு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளல்லாம் இது எப்படின்னா ஒரு பக்கம் சூடா டீ மறுபக்கம் ஜில்லுன்னு
பவண்டோ வச்சீங்கன்னா போதும் என்ன சிரிகிறீங்க காமடி இல்லீங்க நெசம் நெசம் நெசம் நேசந்தனுங்கோ என்னிடம் படிக்கவரும் மாணவர்களுக்கு மற்ற தொழில் நுட்பத்துடன் இதை பற்றியும் சொல்லி தருகிறேன் படிக்க வரவங்க வந்து படிச்சு
பயன் பெறலாம் நாமளும் உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் இவ்ளோ ஆய்வு செஞ்சு
எழுதி இருக்கேன் அதுக்காக பொன்னாடை பட்டாடை ஒன்னும் வேணாம்
உங்க அன்பு இருந்தா போதும் சரி அடுத்த ஒரு புதிய ஆய்வில் உங்களை சந்திக்கிறேன்
நன்றி நண்பர்களே
ஆசிரியர்
லி.பூபதிராஜ்
காரைக்குடி 12.05.2016
(காபிரைட் 2016)
MAHA HI-TECH(india)
ELECTRONICS
காரைக்குடி