வியாழன், 12 மே, 2016

ரூ.9,999-க்கு உலகின் விலை குறைந்த லேப்டாப்



உலகின் விலை குறைந்த லேப்டாப் ரூ.9,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Comp book
ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள காம்ப்புக் எக்ஸலன்ஸ் ரக லேப்டாப்புகள் உலகின் விலைகுறைந்த லேப்டாப் என்ற பெருமையைப் பெறுகிறது. விண்டோஸ் 10 இயங்குதளத்துடனும், 11.6 இன்ச் திரை அளவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லேப்டாப் 2 ஜி ரேம் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாகவும், இதனை 64 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளும் வகையிலும் காம்ப் புக் எக்ஸலன்ஸ் வெளிவரவுள்ளது. அதேபோல, வைஃபை, புளூடூத் வசதிகள் மற்றும் 3 யுஎஸ்பி போர்ட்டுகள் உடனும் இது வர இருக்கிறது.
அதேபோல, காம்ப் புக் வரிசையில் எக்செம்பிளேர் ரக லேப்டாப்புகள் ரூ. 13,999 விலையில் 14 இன்ச் திரை அளவுடன் வெளிவர உள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ.10,459 விலையில் குறைந்த விலை லேப்டாப் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது

Related Posts: