குமரி மாவட்டத்தில் நடைபெற்ற அகில இந்திய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியினர் குறைந்த அளவே வந்ததால் ஏராளமான இருக்கைகள் காலியாக கிடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது தொண்டர்கள் அமர போடப்பட்டிருந்த இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிடப்பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளால் ஊழலை ஒழிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் விபத்து காப்பீடு, இலவச கேஸ், மின்சாரம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர அதிமுக தயாராகவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.