சனி, 8 அக்டோபர், 2016

அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ பேட்டி...


தமிழக முதல்வர் நலமாக இருகிறார்கள். அதிமுக தொண்டர்களின் மனக் கவலை நீங்கும். முதல்வர் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவார்.
காவேரி பிரச்சனையில் நமது உரிமையை நிலை நாட்டியவர். உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பேல் தனது விசிட்டிங் கார்டு தந்தார். அவரிடம் பேசினேன். நீங்கள் இரண்டுமுறை இங்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தது நெகிழ்ச்சி அளிக்கிறது என்றேன்.
இயற்கை அன்னையிடம்முதல்வர் விரைந்து குணமடைய நான் யாசிக்கிறேன்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ

Related Posts: