திங்கள், 31 அக்டோபர், 2016

விண்வெளியில் 115 நாள் ஆய்வு முடித்து பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்

Nasa fb

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாட்டு விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்பினர்‌.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 115 நாள் ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர்கள் ரஷ்யாவின் சோயு‌ஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தான் நாட்‌டில் பாதுகாப்பாக தரையிறங்கினர். இதில் அமெரிக்காவின் ருபின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி மரபணுக்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தார் .பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள விண்வெளி நிலையத்தில் 1998ம் ஆண்டு முதல் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இதில் பல நாட்டு விஞ்ஞானிகளும் சுற்று முறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயணம் குறித்து விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின் கூறுகையில்: விண்வெளியில் இந்த 4 மாதங்களும் பனிச்சுமையுடன் காணப்பட்டதாகவும் இந்த காலக்கட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்று கூறினார்.