சனி, 15 அக்டோபர், 2016

ஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஜியோ சிம்....? எச்சரிக்கை

கடந்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யபட்ட ஜியோ சிம் தற்போது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஜியோ சிம்மை ஆன்லைனில் பெற கூடிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு இடங்களில் இருந்து தகவல்கள் வெளியானது. ஆனால் இது போலியானது என ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4ஜி போன்களில் இயங்ககூடிய ஜியோ சிம் கார்டுகள் பல அதிரடி ஆப்பர்களை வழங்கி வருகிறது. இதன்மூலம், இலவசமாக மூன்று மாதத்திற்கு 4ஜி இணைய சேவையை பயன்படுத்தலாம் என்றும், உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்களும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஜியோ சிம் வாங்கும் மோகம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகி வருகிறது.
இந்த சேவைகளால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள், சிம்கார்டை வாங்க ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இதனை சாதகமாக்கி சில நிறுவனங்கள், ஜியோ சிம்மை ஆன்லைனில் பெறலாம் என தகவல்களை வெளியிட்டு வந்தன. ஆனால் இவைகள் முற்றிலும் பொய்யானது என ஜியோ தெரிவித்துள்ளது.
போலி அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், தற்போது வரை ஆன்லைனில் ஜியோ சிம்கார்டுகள் விற்பனைக்கு வரவில்லை எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.