புதன், 19 அக்டோபர், 2016

பிரதமர் சுற்றும் ராட்டை




-----------------------------------------------
பாலஸ்தீனம் என்கிற ஒரு நாட்டையே கபளீகரம் செய்து பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டித்தான் இஸ்ரேல் என்கிற யூத நாடு 1948இல் உருவானது.
இந்த நாட்டின் முதல் பிரதமர் பென் குரியன் தன் மகனுக்கு 1937இல் எழுதிய கடிதத்தில் இப்படிக் கூறுகிறார்: ”பாலஸ்தீனத்தில் வசிக்கும் அராபியர்களை வெளியேற்றி அவர்களின் இடத்தைக் கைப்பற்றுவோம். அவர்களின் வீடுகளைத் தகர்த்து அவர்கள் வெளியேறும் அளவிற்கு நம் ஒவ்வொரு தாக்குதலும் இருக்க வேண்டும்”.
1948இலிருந்து இன்று வரை லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன மக்களை ஒரு சில பகுதிக்குள் அடக்கி வைத்து, ஒரு பெரிய சுவரைக் கட்டி இன்று வரை அனைத்து வகையான மனித உரிமை மீறல்களையும் நடத்தி வருவதுதான் அந்த ராணுவம். இதற்கெல்லாம் உறுதுணையாக இருப்பவை அமெரிக்காவும் பிரிட்டனும்.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த “சாகசங்களைத்தான்” நேற்று இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்குடன் ஒப்பிட்டு புளகாங்கிதமடைந்திருக்கிறார் பிரதமர் மோடி.
அவர் ராட்டை சுற்றும் படத்துடன் இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது.
நாம் நினைப்பதை விட அபாயகரமான சூழலில்தான் இருக்கிறது இந்தியா!
நன்றி : Vijayasankar Ramachandran (Editor, Frontline)