திங்கள், 31 அக்டோபர், 2016

பெற்றோர்களின் கவனத்திற்கு... குழந்தைகளுக்கு நாய்களை முத்தம் கொடுக்க அனுமதிக்கலாமா...?

குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாக மாறிவிட்டது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள்.
அவை வீட்டில் ஒரு நபராகவே ஒன்றி விடுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் நம் மீது ஏறி கொள்வதும், குழந்தைகளிடம் கொஞ்சுவது போன்றவை விளையாட்டாக இருந்தாலும், அதனால் சில பாதிப்புகள் உண்டு என்ற கருத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
செல்ல பிராணிகளான நாய்கள், வீட்டின் ஒரு அங்கமாக இருக்கலாம். ஆனால், அதன் வாயில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் மிகுதியாகக் காணப்படுகிறது. லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான ஜான் ஆக்ஸ்போர்டு இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டார்.
அந்த ஆய்வின் மூலம் நாய்கள் பல கழிவுப் பொருட்களின் மீது அதன் வாய் பகுதியை கொண்டு செல்லும். எனவே அதன் வாய் பகுதியில் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற பல கிருமிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாய்கள் குழந்தைகளுக்கு நெருக்கமாக வாயை கொண்டு வருவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் பாக்டீரியா தொற்றுகளால் பாதிப்படைகின்றனர். இந்த வைரஸ்கள் தொற்றுகள் இரைப்பைக் குடல் அழற்சியை ஏற்படுத்த கூடியவை. இந்த பாதிப்பினால் பிரான்சில் 2001 முதல் 2011 வரை 42 குழந்தைகள் இறந்துள்ளனர்.
Dog
நாய்களின் வாயில் இருந்து வெளிவரும் பிளே என்னும் எச்சங்களை விழுங்கும் குழந்தைகள், வயிற்றில் நாடாப் புழு தொற்றினால் பாதிப்படைகின்றனர். அதுமட்டுமின்றி, ஹீமோபிளஸ் அஃப்ரோபிலஸ் (Haemophilus aphrophilus) எனும் பாக்டீரியா குழந்தைகளுக்கு இரத்தக் கட்டிகள் மற்றும் இதய வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களையும், மரியாதையும், அன்பையும் கற்று தரும் செல்லப்பிராணிகளால், இத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. எனவே குழந்தைகளை செல்லபிராணிகளிடத்திலிருந்து சற்று தொலைவில் வைப்பதே நன்று.