தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல்(30/10/2016) தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த கியான்ட் புயல் முற்றிலுமாக வலுவிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
தற்போது, அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நீடிப்பதாகவும், தென்மேற்கு பருவமழை முழுவதுமாக இந்திய பகுதியில் இருந்து விலகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சென்னையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.