திங்கள், 17 அக்டோபர், 2016

சசிகுமார்_கொலையாளி

கோவையில் பாஜக செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்கள்தான் கொலையாளிகள் என பரப்பி பெரிய கலவரத்தை செய்தார்கள் பாஜக பயங்கரவாதிகள்.
சசிகுமாரைக் கொன்றவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைமை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த வழக்கு CBCID வசம் சென்றதைத் தொடர்ந்து விசாரணை வளையம் கடுமையாக்கப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஹிந்து முண்ணனி நிர்வாகி ஆனந்த் என்பவர் சசி கொலை வழக்கில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சசிகுமார் கொலை நடந்த இரவில் சசிகுமாரைப் பின் தொடர்ந்தவர்களை ஆங்காங்கே இருந்த CCTV கேமிராக்களை ஆய்வு செய்து சில படங்களை வெளியிட்டனர் காவல்துறையினர். அத்தோடு சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கொடுத்த அடையாளத்தை வைத்து கம்ப்யூட்டர் மூலம் குற்றவாளியிடம் படம் வரையப்பட்டது.
இந்த நிலையில் சசிகுமாரைக் கொன்றதாக காவல்துறையினாரால் வெளியிடப்பட்டுள்ள படம் கோவை அர்ஜுன் சம்பத்தின் மகன்  ஓம்கர் பாலாஜியுடன் ஒத்துப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் ஏற்கனவே தெரிந்த காரணத்தால்தான் கொலையாளியைக் கைது செய்யச் சொல்லி போராட்டம் நடத்திய தலைமை பாஜகவினர் சத்தமில்லாமல் அமைதி காக்கிறார்களாம்.
சசிகுமாரைக் கொன்றது ஓம்கர் பாலாஜி என்பது உறுதி செய்யப்பட்டாலும் காவல்துறையினர் கொலையாளியைக் கைது செய்யவோ யார் கொலையாளி என்பதை வெளியிடவோ மாட்டார்களாம். அது பாஜகவிற்கு பின்னடைவைத் தரும் என்பதால் இந்த வழக்கை காவல்துறை சத்தமில்லாமல் முடக்கிப் போடுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
 ஓம்கார் பாலாஜியைப் பிடித்து விசாரித்தால் சசி கொலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்பதே நிதர்சனம்.

source: kaalaimalar

Related Posts: