1972 டிசம்பர் 27,28 :
மும்பையில் ஒரு மாநாடு. எந்த இயக்கம் சார்பிலும் இல்லாமல் முழுக்க முழுக்க முஸ்லீம்களின் கோரிக்கைகளுக்காகவே நடந்த மாநாடு.
லட்சக்கணக்காண முஸ்லீம்கள் கலந்துகொண்ட மாநாடு அது.
1973:
முஸ்லீம்களுக்கான தனி நபர் சட்ட வாரியம் அமைக்கப்பட்டது. ஒரு மாநாடு நடத்தி ஒரே வருடத்தில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
அதுவும் ஆர்.எஸ்.எஸ் ஸின் ஆதிக்கம் நிறைந்த மும்பையில்.
அவ்வொற்றுமையின் போதெல்லாம் பொது சிவில் சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.
இப்போது ஆர்.எஸ்.எஸ் அச்சட்டத்தை நிறைவேற்ற முனைகிறது. காரணம் என்ன? இப்போது நம்மால் அந்த மாதிரி ஒரு மாநாட்டை ஆர்.எஸ்.எஸ் தலையெடுக்காத ஊரிலும் நடத்தமுடியாது...!
நாம்தான் இயக்கங்களுக்காக பிரிந்து கிடக்கிறோமே..!
அவன் இவனை காபிர் என்கிறான். இவன் அவனை காபிர் என்கிறான் .
இவர்களா இந்த சமூகத்தை முன்னேற்ற போகிறார்கள்....?
அப்படியே பொது சிவில் சட்டம் வந்தாலும் ஒவ்வொரு இயக்கமும் தனித்தனியா ஒவ்வொரு நாள் போராட்டம் நடத்துவார்கள்...!
அப்புறம் ஷர்ட்டரை சாத்திட்டு போகவேண்டியதுதான்...!