தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்து சமூகத்தில் உள்ள பெண் சிசிக்கொலையை வன்மையாக கண்டித்தார்.
இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரித்தார். அதே போல் தொலைப்பேசியில் தலாக் என்ற வார்த்தையை 3 முறை கூறி முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
முஸ்லீம் பெண்கள் மீதான பிரதமரின் திடீர் பாசம் அரசியல் காரணங்களுக்கானது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில் இதுகுறித்து நக்கீரன் இணையதளத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், பிரதமரின் முஸ்லீம் பெண்கள் மீதான அக்கறை பா.ஜ.க. வின் தேர்தல் வியூகம் என 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உண்மையான அக்கறை என 20 சதவீதம் பேரும், சட்டத்தின் மூலமே பாதுகாப்பு தேவை என 22 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.