வியாழன், 20 அக்டோபர், 2016

தீவிரவாதிகள் என தவறாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு!


சுவிட்சர்லாந்து நாட்டில் தீவிரவாதிகள் என நினைத்து தவறாக கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெனிவா நகரில் சிரியா நாட்டை சேர்ந்த இரண்டு பேர் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் காரில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, இருவரின் காரை மறித்த பொலிசார் அவர்களிடம் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகித்து காரை பறிசோதனை செய்துள்ளனர்.
எனினும், காரில் வெடிபொருட்கள் இல்லாத நிலையிலும் இருவரும் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது என எண்ணிய பொலிசார் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து விசாரணை செய்தது.
ஆனால், கடந்தாண்டு ஜனவரி மாதம் இருவரும் தீவிரவாதிகள் இல்லை என நிரூபனம் ஆனதை தொடர்ந்து 50 நாட்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
எந்த குற்றமும் செய்யாத தங்களை 50 நாட்கள் சிறையில் அடைத்த காரணத்திற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என இருவரும் முறையிட்டுள்ளனர்.
இருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் ஒருவருக்கு 11,100 பிராங்க் மற்றும் மற்றொரு நபருக்கு 12,500 பிராங்க் என மொத்தம் 23,600 பிராங்க்(35,14,868 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.