peacock begonia எனும் இந்த செடி மலேசியாவின் அடர் காடுகளின் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட புதியவகை செடியாகும். நீலநிறத்தில் ஒளிரும் இலைகளை இச்செடி கொண்டுள்ளது ஏன் என்பது நீண்டநாட்களாக விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தின் பிரிண்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதற்கான விடையை கண்டறிந்துள்ளது. புதிய கண்டுபிடிப்பால் வாயடைத்து போயுள்ள விஞ்ஞானிகள் “மாபெரும் புத்திசாலி” என peacock begonia செடியை புகழ்ந்துள்ளனர்.
அடர்காட்டில் இருளில் ஒளிச்சேர்க்கை செய்ய சிரமமாக இருக்கும் என்பதால் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு இதன் இலைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அடர்காடுகளின் கீழே குறைந்த அலைநீளம் உள்ள நீல கதிர்கள் வந்தடையும் என்பதால், அங்கு கிடைக்காத பச்சை மற்றும் சிகப்பு நிற அலைநீள கதிர்களை கவர்ந்து ஒளிசேர்க்கை செய்யவே இதன் இலைகள் நீல நிறம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
பரிணாம வளர்ச்சியின் புதிய வடிவம் நமக்கு புரியவந்துள்ளதை காட்டிலும், ஒளியின் அலைநீளம் தொடர்பான குவாண்டம் இயற்பியல் விதிகள் ஒரு செடிக்கு புரிந்துள்ளது தான் விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.