செவ்வாய், 18 அக்டோபர், 2016

கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட பெண்: பா.ஜ.க தலைவர் மகன் கைது

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் 36 வயது பெண்ணை பா.ஜ.க தலைவர் ஒருவரின் மகனும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு தன் வீட்டின் பின்புறம் தனது சகோதரியுடன் இருத்த அப்பெண்ணை தேவேந்திரா, ஃபரித் அலி மற்றும் பிரின்ஸ் சலுஜா அங்கிருந்து தங்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை அந்த மூன்று பேரும் கற்பழித்து அதனை படம் பிடித்துள்ளனர். மேலும் அவர் காவல்நிலையத்திற்குச் சென்றால் அப்பெண்ணின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.
சம்பவம் நடந்த மறுநாள் அப்பெண் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளிகளான மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.
கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட பெண்: பா.ஜ.க தலைவர் மகன் கைது
இவர்களில் பிரன்ஸ் சலுஜா என்பவர் அப்பகுதியில் மாவட்ட அளவில் பா.ஜ.க வில் பொறுப்பு வகித்தவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA/

Related Posts: