சனி, 29 அக்டோபர், 2016

விற்பனை செய்த கார்களை திரும்பப்பெறும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம்



கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் கார்களில் பழுதுள்ள சுமார் 51,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ரினால்ட் இந்தியா நிறுவனம், நிஸ்ஸான் நிறுவனத்துடன் இணைந்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதில், குறைந்த விலை கார்களான ரினால்ட் குவிட் மற்றும் தட்சுன் ரெடி கோ ஆகியவற்றின் எரிபொருள் வடிவமைப்பில் குறைபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, குறைபாடு உள்ள கார்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரினால்ட் குவிட் எனும் பெயரில் விற்கப்பட்ட சுமார் 50,000 கார்களை திரும்பப் பெறவும், தட்சுன் ரெடி கோ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களில் பழுதுள்ள 932 கார்களை திரும்பப் பெறவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இந்த கார்களை பழுது நீக்கி மீண்டும் வாடிக்கையாளர்களிடம் தர ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம் முடிவு செய்து, இதற்கான அறிவிப்பின வெளியிட்டுள்ளது.