டெல்லி ஜெ.என்.யூ பல்கலைகழக வளாகத்தில் நள்ளிரவில் மாணவர் அமைப்பினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திடீரென 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நஜீப் என்னும் மாணவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானதாகவும், அவரை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்கலைகழக நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் திடீர் போராட்டத்தை அறிந்து ஜெ.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாரும், பல்வேறு மாணவ அமைப்பினரும் குவியத் தொடங்கியதால் ஜெ.என்.யூ வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெ.என்.யூ விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும். சில மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல்களும் நடைபெறுவதாகவும் இதில் பாதிக்கப்பட்ட ஒருமாணவர்களில் ஒருவரான நஜிப் அகமது காணமால் போயுள்ளார். இவர் தற்போது எங்குள்ளார் என தெரியவில்லை என்று ஜெ.என்.யூ மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.