நம் வாழ்வில் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது செல்போன். தொலைதொடர்பு, இசை, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காக நாம் பயன்படுத்தும் செல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன் என்று யாராவது சிந்தித்ததுண்டா?.
நம் அனுதினம் உபயோகபடுத்தும் செல்போன்கள் வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ, முக்கோண வடிவிலோ வடிவமைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?. ஆனால் செவ்வக வடிவில் அமைந்திருப்பது ஏன்?.
முதன்முதலில் செல்போன்கள் செவ்வக வடிவில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இயற்கையாகவே கீபேட், திரை, மைக் மற்றும் ஸ்பீக்கர் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்க இத்தகைய செவ்வக வடிவத்தில் செல்போன்களை வடிவமைத்தனர்.
இது ஒரு இயல்பான காரணம் தான். ஆனால் இதையும் தாண்டி சில தொழில்நுட்ப காரணங்களும் இதன் பின்னணியில் உள்ளது. என்னவெனில், செவ்வக வடிவில் இருந்தால்தான் நம் பார்வை செல்போன் முழுமையையும் ஒரே நேரத்தில் சென்றடையும்.
அதுமட்டுமின்றி, வரிசைப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள் செவ்வகவடிவில் இருந்தாலே நம் படிப்பதற்கு எளிதாக இருக்கும். நம் எடுத்து செல்வதற்கும் செவ்வக வடிவ செல்போன்கள்தான் வசதியாக இருக்கும். இயற்கையாகவே மனிதனுடைய பார்வை 16:9 என்ற விகிதத்தில் தான் சமமாக அனைத்தையும் நோக்கும்.
இதேபோல, பிக்சல்கள் பொதுவாக சதுர வடிவிலேயே அமைந்திருக்கும். இதற்கு நேர்மாறாக வட்ட வடிவில் செல்போன் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும் போது போது பிக்சல்கள் சிதறி முழுமை அடையாமல் போக வாய்ப்புண்டு. இதனால் பார்வை திறன் அனைத்து திசைகளிலும் செல்லாது. செவ்வக வடிவத்தின் பின்னணியில் சில கணித விதிமுறைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வகத்தின் சுற்றளவானது வட்டம் அல்லது முக்கோண வடிவத்தின் சுற்றளவை விட அதிகமாக உள்ளது.
உதாரணமாக, வட்ட வடிவத்தில் செல்போன்கள் உள்ளது என்று எடுத்து கொள்வோம்.அப்படி இருந்தால், செல்போன்களை எடுத்துச் செல்வது மற்றும் கீபேடில் டைப் செய்வது என பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
பதிவு செய்த நாள் : October 31, 2016 - 04:49 PM