வியாழன், 2 மார்ச், 2017

‘பணம் எடுத்தாலும், கட்டினாலும் ரூ.150 கட்டணம்’’ வங்கிகள் அதிரடி அறிவிப்பு ! மோடியின் அடுத்த ஆப்பு மக்களே !

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு முதல் பணத்தட்டுப்பாடு, சரியான சில்லரை கிடைக்காமல் அவதி, நாள் முழுவதும் ஏடிஎம், வங்கிகளில் காத்திருப்பு என மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பணத்தட்டுப்பாடு, பணம் எடுத்தல் மற்றும் செலுத்துதலில் சகஜ நிலைக்கு திரும்பியது. மேலும், பணத்தட்டுப்பாடு நேரத்தில் ஏடிஎம் எந்திரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், மாதத்திற்கு 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் முடிவு செய்துள்ளது.
ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து, மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகளின் இந்த அதிரடி நடவடிக்கை, ரொக்கப் பணப்பரிவர்தனைக்கு மட்டுமே தவிர, காசோலை மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு இந்த கட்டணம் கிடையாது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு வாடிக்கையாளர்களை கொண்டுவருவதற்கான முயற்சி எனக் கூறப்படுகிறது.

kaalaimalar