வியாழன், 16 மார்ச், 2017

அசிஸ்டென்ட் என்ஜினியருக்கு ரூ 17 லட்சம், JE -15 லட்சம்.. கூவி கூவி விற்கப்படும் மின்வாரிய பதவிகள் !

அசிஸ்டென்ட் என்ஜினியருக்கு ரூ 17 லட்சம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை செயற் பொறியாளர் பணிக்கு 375 காலி பணியிடங்கள் இருந்தது .இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன .
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்தனர். இதில் தேர்வானவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி முதல் வரும் 18 ஆம் தேதி வரை , சென்னை வண்டலூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில், நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துக் கொள்வதற்காக சேலத்திலிருந்து நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்வதற்காக வந்த ஒரு பெண் உதவி செயற்பொறியாளர் பதவிக்கு 17 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.
 

இதே போன்று இளநிலை உதவி பொறியாளருக்கு 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பணம் கொடுத்தவர் தனக்கு வேலை கிடைக்குமா ? அல்லது பணம் திரும்ப கிடைக்குமா என்று புலம்பலில் உள்ளார் அந்த பெண்
kaalaimalar