வெள்ளி, 3 மார்ச், 2017

விடிய விடிய காட்டுத் தீ; 250 ஏக்கர் கருகிய பரிதாபம்!!


கோவை மாவட்ட பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியான பொள்ளாச்சி, வால்பாறை, மானம்பள்ளி, உலாந்தி (டாப்சிலிப்) ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு மூங்கில், தேக்கு  உள்ளிட்ட ஏராளமான மரங்கள் இங்கு உள்ளன. கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று மாலையில் டாப்சிலிப் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மூங்கில் காடுகளில் பற்றிய தீ கோழிகமுதி, எருமைப்பாறை வனப்பகுதிக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்த மாவட்ட வன அலுவலர்கள், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காப்பாளர், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனப்பகுதி முழுவதும் தீ பரவி 150 ஏக்கரில் இருந்த ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாகின.
இதேப்போல், நீலகிரி மாவட்டம் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சீகூர், எப்பநாடு உள்ளிட்ட மலைச்சரிவுகளில் நேற்று மாலை 5 மணி அளவில்  காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து தீ வேகமாக பரவியதால் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான வனம் தீயில் நாசமானது