திங்கள், 6 மார்ச், 2017

5ஜி தொழிநுட்பத்துடன் களமிறங்கத் தயாராகும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் நோக்கியா 5ஜி தொழில்நுட்பத்திற்காக புதிய ஒப்பந்தத்தில் இணைய திட்டமிட்டுள்ளது.
பிஎஸ்என்எல்- நோக்கியா செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் 5ஜி தொழிநுட்பத்திற்கான செயல் விளக்கம், அதிவேக டேட்டா பயன்பாடு, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் செயலிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய திட்டங்கள் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் எதிர்கால 5ஜி நெட்வொர்க்குகளுக்கு பாலமாக இருக்கும் எனவும் பிஎஸ்என்எல் தலைவர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய அவதாரம் எடுத்துள்ள நோக்கியா பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பல புதிய திட்டங்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

Related Posts: