வியாழன், 16 மார்ச், 2017

முஸ்லிம் பெயர் ஒன்றே போலி தீவிரவாத வழக்கு பதிய காவல்துறைக்கு போதுமானது! அதிர்ச்சி தகவல்! உண்மைதானே மக்களே !

ஒரு திருடன் மீது வழக்கு பதிவதை காட்டிலும் ஒருவர் மீது தீவிரவாத குற்றம் சுமத்துவது எளிது. ஒருவர் மீது போலியான தீவிரவாத வழக்கு பதிய முஸ்லிம் பெயர் ஒன்றே காவல்துறைக்கு போதுமானது என்று தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு 2016 டிசம்பர் மாதம் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட இர்ஷத் அஹ்மத் மாலிக் கூறியுள்ளார். இவர் முன்னதாக இந்திய உளவுத்துறைக்கு இன்ஃபார்மராக பணியாற்றி வந்தவர். அவர்களது சில கட்டளைக்களை இவர் ஏற்க மறுத்ததால் இவர் தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை Innocence India Network அமைப்பு ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் தீர்பாயத்தின் முன் உரையாற்றிய போது இர்ஷத் அஹ்மத் மாலிக் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். 1991 இல் தனது சகோதரரின் கைதிற்கு பிறகு டில்லி சிறப்பு காவல்துறை தன் பின்னால் சுற்றியதாகவும் பின்னர் இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாற்றிகுள் சென்ற தன்னை உளவுத்துறை அதிகாரிகள் அவர்களுக்காக பணியாற்றும்படி கூரியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கென தனக்கு மாதம் 7000 ரூபாய் பணத்தை ஊதியமாக உளவுத்துறையினர் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
IRSHATH AHMED MALIK
“நான் நாட்டிற்காக பணியாற்றுகின்றேன் என்று என்னை அவர்கள் நம்ப வைத்தனர். பின்னர் அவர்கள் என்னை பாகிஸ்தானுக்கு ஒரு ரகசிய திட்டத்திற்காக செல்லும்படி கூறினார்கள். மேலும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களை ஜிஹாதில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கும்படி என்னிடம் கூறினார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் கட்டளையை ஏற்க மறுத்த போது இர்ஷத் கைது செய்யப்பட்டார். 11 வருடம் சிறைவாசத்திற்கு பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2008 ஜெய்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரஷித் ஹுசைன், இந்த நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளின் பின்னணியிலும் உளவுத்துறையின் பங்கு இருப்பதாக கூறியுள்ளார். “நான் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு மாத காலத்தில் அவர்களின் 250 பேர்களிடம் நான் பழகியுள்ளேன். ஆனால் நான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டேன். எனக்கெதிரான ஓரே ஆதாரமாக கூறப்பட்டது, யஹ்யா கம்முகுட்டி என்பவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் தான். அவர் ஹுப்பால்லி தீவிரவாத வழக்கில் கைது செய்யபப்ட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.” என்று கூறியுள்ளார் ரஷித்.
இவர்களுடன் மேலும் பல தீவிரவாத வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட யஹ்யா கம்முகுட்டி, செய்யத் இம்ரான்(இவர் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றமற்றவர் என்று விடிவிக்கப்பட்டவர்), நிசார் (இவர் பனாயிகுளம் சிமி வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்), ஹனிஃப் பகிட்வாலா (இவர் அஹமதாபாத் டிபன் பாக்ஸ் குண்டு வழக்கில் கைது செய்து விடுவிக்கப்பட்டவர்) மற்றும் அப்ரார் அஹமத் (இவர் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற வற்புறுத்தப்பட்டவர்) ஆகியோர் தங்களது அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.