மத்திய அரசிடம் இருந்து முறையாக நிதி வழங்கியிருந்தால் தமிழகத்தில் நிதிபற்றாக்குறை ஒரளவுக்கு சீர்செய்யப்ட்டிருக்கும் என நிதித்துறை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
2017 – 2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
எடப்பாடி அரசு பொறுப்பேற்ற முதல் பட்ஜெட் தாக்கல் இது என்பதால் அனைவரிடமும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இதனிடையே எதிர்கட்சிகள் தமிழகம் கடனில் மூழ்கி இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்யாது என கூறி வந்தனர்.
2017 – 2018 ஆம் ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை 41 ஆயிரத்து 977 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தின் கடன் தொகை 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் என அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.
இந்த நிதி நிலை அறிக்கையின்படி தமிழக அரசின் கடன்சுமை 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடன் 1 கோடி ரூபாய் அதிர்கரித்துள்ளது. 41 ஆயிரத்து 965 கோடி ரூபாய் கடன் வாங்கவும் 1200 கோடி ரூபாய் நிதி திரட்டவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், நிதித்துறை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுப்பவேண்டிய நிதித் தொகையை அனுப்பவில்லை.
ஆனால் இதற்கு செலவான தொகையை தமிழக அரசு செய்துள்ளது.
மத்திய அரசு திட்டங்களை தீட்டியதுடன் அதற்கான செலவு தொகையை இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
தற்போது வரை மத்திய அரசிடம் இருந்து 5 முதல் 6 ஆயிரம் கோடி ருபாய் இன்னும் தமிழகத்திற்கு வழங்கப்படாமல் நிலுவையிலேயே உள்ளது.
இந்த தொகைகளை மத்திய அரசு முறையாக வழங்கியிருந்தால் தற்போது நிதிபற்றாக்குறை சரிசெய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
source; kaalaimalar