வியாழன், 30 ஜூன், 2016

உயர் ரத்த அழுத்தமா? முருங்கைக்கீரை சூப் குடியுங்கள்!



முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி,சி, கே மற்றும் கால்சியம்,மாங்கனீசு உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.
இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நீரில்அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடிஅளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி,சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கைஅதிகரிக்கும்.
சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும்இதை எடுத்துக்கொள்ளலாம்.