இந்த மீத்தேன் திட்டத்தினால் மத்திய அரசு அடையும் இலாபம் 5,000 கோடி.அதில் தனியார்க்கு 25% கோடிகள் போகும்.தமிழகத்திற்கு 300 கோடியும்,புதுக்கோட்டை நெடுவாசலுக்கு 1 லட்சமும் போகும்.இந்த அறிக்கை பாஜக அரசே பிப்ரவரியில் வெளியிட்ட அறிக்கையாகும்.
இந்த அற்ப 1 லட்சத்திற்காக விவசாயம் பாதிக்கப்பட வேண்டுமா?
குடிநீருக்காக அம்மக்கள் அலையவேண்டுமா?
தமிழகத்தில் உணவு பஞ்சம் வரவேண்டுமா?
சந்திரபோஸ்(விவசாயி):
என்னை நிர்பந்தபடுத்தி பாஜக அரசு என் இடத்தை வாங்கி மீத்தேன் திட்டத்தை செயல்பட முயற்சி செய்கிறது.
ராகவன்(பாஜக):நீங்கள் ஏன் விற்றீர்கள்?
சந்திரபோஸ்:நீங்கள்தானே நிர்பந்தபடுத்தினீர்கள்?
ராகவன்:விற்றுவிட்டால் அவ்வளவுதான்
சந்திரபோஸ்:நீங்கள் தானே என்னை ஏமாற்றினீர்கள்?
திருமுருகன்:நீங்கள்(பாஜக) உங்கள் திட்டத்தை முழுமையாக கூறியிருந்தால் எந்த விவசாயியும் வாங்கியிருக்க மாட்டார்.
ராகவன்:உங்களை போன்ற சிறு குழுக்கள் தான் தேசவிரோத கூட்டமாக இருக்கின்றீர்கள்.
திருமுருகன்:காந்தியை கொன்ற உங்கள் கூட்டம் தேசதியாகிகள்?நாட்டிற்காக போராடும் நாங்கள் தேசதுரோகிகளா?
ஈஷா மையம் விழாவிற்கு வரும் மோடி எங்கள் நாட்டின் விவசாயிகள் படும் கஷ்டத்தை கேட்க வர வக்கில்லை.
source: kaalaimalar