வியாழன், 2 மார்ச், 2017

முஸ்லீம்களின் சடலங்களை எரிக்க வேண்டும்: தேச விரோதி பாஜக எம்.பி திமிர் பேச்சு!


லக்னோ: மயானங்களுக்கு போதிய இடம் இல்லாததால் முஸ்லீம்களின் சடலங்களை புதைப்பதற்கு பதில் எரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர் போனவர் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். இந்நிலையில் அவர் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மயானத்திற்கு கபர்ஸ்தான் அல்லது ஷம்ஷான் என்று எந்த பெயரை வைத்தாலும் சரி யாரையும் புதைக்கக் கூடாது. நம் நாட்டில் 2 முதல் 2.5 கோடி இந்துக்கள் உள்ளார்கள். அவர்கள் இறந்த பிறகு நினைவிடம் கட்டப்பட வேண்டும். அதற்கு நிலம் தேவை. நாட்டில் 20 கோடி முஸ்லீம்கள் உள்ளனர். அனைவரையும் புதைக்க இடம் தேவை.
நம் நாட்டில் அவ்வளவு நிலம் எங்கு உள்ளது? முஸ்லீம்களின் உடல்களை புதைக்கக் கூடாது, எரிக்க வேண்டும் என்றார்.

source: kaalaimalar

Related Posts: