வியாழன், 2 மார்ச், 2017

கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு..! சுற்றுசுழலுக்கு பேராபத்து..?

புவியை வெப்பமடைய செய்யும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது
வளி மண்டலத்தில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, முன்பு இருந்ததை விட தற்போது 44 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உள்பட பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பு விவரங்களையும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் அடுத்த மாதத்திலிருந்து அமலாக இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மாசு தான் இந்த ஆபத்தான உச்ச அளவுக்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிகின்றது. இதனால் சுற்றுசுழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. நிலக்கரி, டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்தால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.