சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-2018 நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 7,000 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்க்கடன்கள் வழங்கப்படும். சிறப்புப் பொதுவழங்கல் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
உணவு மானியத்துக்காக 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு 567கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் துறைக்கு 16,998கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு 2192 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.