வியாழன், 16 மார்ச், 2017

இரண்டரை கோடி வயதுடைய உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது! March 16, 2017

இரண்டரை கோடி வயதுடைய உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது!


உலகில் மிகப்பெரிய உயிரினமான ஆஸ்திரேலியாவில் உள்ள  இரண்டரைகோடி வயதான "கிரேட்  பேரியர்" ன்றழைக்கப்படும் பவளப்பாறை  உயிரிழந்தது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள கடல்பகுதியில் சுமார் 1,400 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப்பாறையானது , கடல்வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய கேந்திரமாகும். இந்த பவளப்பாறை 1,625 வகையான மீன்கள், 3000 வகை மெல்லுடலிகள், 3000 வகையான சிறிய பவளப்பாறை உயிரினங்கள், 220 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான திமிங்கலங்கள், டால்பின்கள் ஆகியவற்றின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த பவளப்பாறை கூட்டம் இறந்துவிட்டதாகக் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது.


இந்த பவளப்பாறையானது இரண்டரை கோடி ஆண்டுகள் பழமையானதாகும் . 1400 கி.மீ நீளம் கொண்ட கிரேட் பேரியர் பவளப்பாறையின் மேல் 1,050 தீவுகள் அமைந்துள்ளன. விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியில் நம் கண்களுக்கு புலப்படும் ஒரே உயிருள்ள அமைப்பு இதுதான்.


இந்த பவளப்பாறையின் 93 சதவீத பகுதி, உலக வெப்பமயமாதலின் காரணத்தால் கடல் நீர் வெப்பமடைந்து, அதன் காரணமாக அழிந்துள்ளது என கடல்சார் விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமயமாதல் போன்றவை எந்தளவுக்கு கொடூரமாக உள்ளது என்பதற்கு இந்த பவளப்பாறையின் உயிரிழப்பே ஒரு மிகப்பெரிய சாட்சியாகும்.