தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வாக்குப்பதிவின்போது பின்பற்றவேண்டிய நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி…
தேர்தல் தொடர்பான யாதொரு கூட்டத்தையே ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது பங்கேற்கவோ கூடாது
யாதொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம், ரேடியோ, வாட்ஸ்அப் முகநூல், ட்விட்டர் அல்லது இது போன்ற சாதனங்கள் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. குறுஞ்செய்தி, மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்ன்னு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
தொகுதி வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கட்சி பணியாளர்கள், மற்றும் அத்தொகுதி வாக்காளர் அல்லாதோர் ஏப்ரல் 4 அன்று மாலை 7 மணியுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
திருமண மண்டபம், சமுதாயகூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம், ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேகனும் தங்கியுள்ளார்களா என்பதை கண்டறிய வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் வாகன அனுமதிகள்,ஏப்ரல் 4 அன்று மாலை 7 மணியுடன் செயலிழந்துவிடும்.
இரண்டு நபர்கள் மட்டுமே கொண்ட வேட்பாளர்களின் அலுவலகங்களின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்க கூடாது.
source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-2021-election-commission-release-instructions-288425/