வெள்ளி, 2 ஏப்ரல், 2021

சிறு சேமிப்பிற்கான வட்டி விகித குறைப்பு; உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு

 இன்று முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்ட சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகித குறைப்பு திட்டத்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு. வியாழக்கிழமை காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ”மேற்பார்வை வழங்கிய உத்தரவுகள் திரும்ப பெறப்படும்” என்று ட்வீட் வெளியிட்டார். அரசாங்கம் புதன்கிழமை பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் 40-110 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறியது.


இந்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் கடந்த 2020-21 காலாண்டில் எப்படி இருந்ததோ அதே விகிதங்கள் தொடரும் என்றும், அதாவது மார்ச் 2021-ன் போது இருந்த அதே விகிதங்கள் இப்போது தொடரும் என்றும் சீதாராமன் இன்று காலை 07.54 மணிக்கு ட்வீட் செய்தார்.

அரசு பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயுடன் சிறு சேமிப்பு விகிதங்கள் இணைக்கப்பட்டன. இது ஆர்.பி.ஐ. பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக வட்டிவிகிதங்களை குறைத்த போது, இதன் வருவாய் விகிதமும் குறைந்தது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், நிதி அமைச்சர், 2021 -22க்கான முதலாம் காலாண்டில் வட்டி விகிதம் 4% முதல் 3.5% ஆக குறைக்கப்படுகிறது என்று கூறினார். டைம் டெபாசிட்டுகளுக்கான விகிதமும் குறைக்கப்பட்டது. மிகவும் பிரபலமான பி.பி.எஃப்.பின் விகிதமும் கூட 7.1%ல் இருந்து 6.4% ஆக குறைந்தது. தேசிய சேமிப்பு சான்றிதழின் (National Savings Certificate) விகிதமும் 6.8%ல் இருந்து 5.9% ஆக குறைக்கப்பட்டது. அதே போன்று பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் விகிதமும் 7.6%ல் இருந்து 6.9% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டது.

ஒருவருட டைம் டெபாட்ட்சிற்கான விகிதங்கள் 110 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.5%-ல் இருந்து 4.4% ஆக ஆக்கப்பட்டது. இரண்டு, மூன்று, மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்டின் விகிதங்களும் 40 முதல் 90 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

பணவீக்கம் அதிகரிக்கும் நேரத்தில் நிதி அமைச்சகத்தின் சுற்றறிக்கை வந்தது. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய சில்லறை பணவீக்கத் தகவல்கள் பிப்ரவரி மாதத்தில் மூன்று மாதத்தில் மிக உயர்ந்த அளவான 5.03% த்தை கொண்டிருந்தது. இது ஜனவரி மாதத்தில் 16 மாதத்தில் இல்லாத குறைவான 4.06% த்தை கொண்டிருந்தது. வட்டி விகிதங்களைக் குறைப்பது அரசாங்கம் செலவுகளைக் குறைக்க உதவியிருக்கும், ஆனால் முதலீட்டாளர்களை, குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதித்திருக்கும்.

முதிர்ச்சியின் முக்கிய அரசாங்க பத்திரங்களில் உள்ள இயக்கத்திற்கு ஏற்ப சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மீட்டமைக்கப்படுகின்றன. 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில், நிதி அமைச்சகம் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 140 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. இது கடந்த மூன்று காலாண்டுகளாக இவை சீராக வைக்கப்பட்டிருந்தன.

source https://tamil.indianexpress.com/business/government-reverses-decision-to-cut-small-savings-rates-287582/