திங்கள், 5 ஏப்ரல், 2021

வாக்களிக்க செல்லும் முன் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள் மக்களே

 ஏப்ரல் 6ம் தேதி அன்று (நாளை) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இன்று மிகவும் முக்கியமாக காணப்பட இருக்கும் காரணங்களில் ஒன்று கொரோனா நோய் தொற்று. எனவே நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்வது அனைத்திலும் முக்கியமானது. மாஸ்க் அணிய மறக்காதீர்கள்; கட்டாயமாக சானிட்டைஸர் வைத்துக் கொள்ளுங்கள்; பின்பு மறக்காமல் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள்.

உங்களின் பெயர் விடுப்பட்டிருந்தால் என்ன செய்வது?

உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் நீங்கள் உடனடியாக உங்கள் வாக்குச்சாவடிக்கான பூத் ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்து என்ன செய்வது என்று பேசுங்கள். உங்களின் பெயர் தேசிய வாக்காளர் சேவையகம் (NVSP) பதிவாகியிருந்தால் உங்ங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும்.

உங்களிடம் வாக்காளர் அடையாளா அட்டை இல்லை என்றால் http://www.nsvp.in இணையத்திற்கு சென்று EPIC download-ஐ க்ளிக் செய்யவும். அங்கு உங்களின் எபிக் எண்ணை உள்ளீடாக கொடுத்தால் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும். உங்களின் புகைப்படம் இல்லை என்றாலும் நீங்கள் அதனை அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்ட் உதவியுடன் நீங்கள் வாக்களிக்கலாம்.

நீங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளாரா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

http://www.electoralsearch. in இணையத்திற்கு சென்று உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடாக செலுத்தவும். பின்பு உங்களின் பெயர், வயது, முகவரி, உங்களின் வாக்குச்சாவடி ஆகியவற்றை காட்டும். உங்களின் வாக்குச்சாவடி ஊழியரின் எண்ணும் அதில் வழங்கப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் நீங்கள் அவரை தொடர்பு கொள்ளலாம்.

பூத் ஸ்லிப்

நீங்கள் உங்களின் பூத் ஸ்லிப்பை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று மாலை 5 மணி வரை உங்களுக்கு உங்களின் பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?

http://www.elections.tn.gov. in >> அதில் “Electoral Roll” >> என்பதை க்ளிக் செய்து “Final Publication of Electoral Rolls” என்ற பகுதிக்கு செல்லவும். அங்கே உங்களின் தொகுதி பெயர் மற்றும் பூத் நம்பரை கண்டு அதில் உங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : Tamil Nadu Assembly Election Live Updates: தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு; 88,937 வாக்குச்சாவடிகள் அமைப்பு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

வாக்களிக்கும் இடத்தில் என்ன நடக்கும்?

நீங்கள் வாக்களிப்பதற்கு முன்பு, தேர்தல் அதிகாரி உங்களின் வாக்குகள் பதிவாக கண்ட்ரோல் பட்டன் ஒன்றை அழுத்துவார்.

வாக்களிக்கும் பகுதிக்குள் சென்ற பின்னர் நீங்கள் பாலோட் யூனிட்டில் பச்சை நிற விளக்கு எரிவதை காண்பீர்கள். வாக்கினை பெற தயார் நிலையில் இருப்பதை அந்த நிறம் குறிப்பிடுகிறது.

வேட்பாளருக்கு அருகே இருக்கும் நீல நிற பொத்தானை நீங்கள் அழுத்தியவுடன், அந்த பச்சை நிற விளக்கு சிவப்பு நிறமாக மாறிவிடும். உங்கள் வாக்கு உறுதி செய்யப்பட்டதை அறிவிக்க ஒரு “பீப்” சத்தம் வரும்.

இந்த இரண்டு உறுதிகளோடு ஒருவர் வி.வி.பி.ஏ.டி. மூலமாகவும் வாக்கு பதிவானதை உறுதி செய்து கொள்ளலாம்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும்

வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பும் சென்ற பிறகும்

வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பே நீங்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். உங்களின் அடையாளத்தை உறுதி செய்ய வாக்குச்சாவடி பணியாளர் மாஸ்க்கை நீக்க சொல்வார்.

உங்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு கையுறைகள் வழங்கப்படும்.

பாலோட் பகுதியில் நீங்கள் உங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும்.

பின்னர் உங்களின் கையுறைகளை கழற்றி குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்

கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம்.

மொபைல் போன்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது.

வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் அவர்களின் சின்னங்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே ஒட்டப்பட்டிருக்கும். அதனை உறுதி செய்த பிறகு நீங்கள் உள்ளே சென்று வாக்குகளை பதிவு செய்யலாம்.

source https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-elections-2021-key-points-to-remember-before-you-go-for-voting-288689/