சனி, 17 ஜூலை, 2021

ஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

 

ஐரோப்பாவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 100 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து உட்பட அண்டை நாடுகளில் பலத்த மழை பெய்தது. இதுவரை இல்லாத அளவு பெய்த கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. தெருக்கள், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

கழுத்தளவு தண்ணீரில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டு தத்தளித்தனர். வெள்ளத்தில் வீடுகள் முழ்கியும் கட்டடங்கள் இடிந்தும் விழுந்தன. சுவிட்சர்லாந்தில் தொடா் மழை காரணமாக பல ஆறுகளின் கரைகள் உடைந்தன. இதனால் வெள்ளம் பல்வேறு ஊர்களுக்குள் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்ட பலரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 100 பேரை காணவில்லை என்றும் சாலைகள் சேதமடைந் துள்ளதாலும் தகவல் தொடா்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வரலாறு காணாத மழை வெள்ளத்துக்கு புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம்தான் காரணம் என ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

17 07 2021 

source https://news7tamil.live/europe-flooding-deaths-pass-150.html