வியாழன், 15 ஜூலை, 2021

கொரோனா: கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் முறையை எவ்வாறு பாதித்தது?

 கொரோனா தொற்று சாதாரண வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை மாற்றியுள்ளது. உதாரணமாக மக்கள் எப்படி உணவு பொருட்கள் வாங்கினார்கள் என்பது உட்பட பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகைக்கடைகள் திறந்திருந்தன. எனினும் பல வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் போதுமான உணவு பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை. தொற்று காலத்தில் மக்கள் மளிகைக்கடைக்கு செல்வது குறைவாகவே இருந்தது. ஆனால் ஒருமுறை செல்லும்போதே அதிக செலவில் பொருட்களை வாங்கினர்.

கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரான் சூ மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பப்ளிக் ஹெல்த் இதழில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில் வள பற்றாக்குறை மற்றும் நுகர்வோரின் உணவு பாதுகாப்பு நிலை ஆகியவை அமெரிக்காவில் உணவு பொருட்கள் கொள்முதலை எவ்வாறு பாதித்தன என கூறப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உணவு உத்திரவாத நபர்களைப் போலவே, உணவு உத்திரவாதமற்ற நபர்களும் குறைவான மளிகை ஷாப்பிங் பயணங்களை மேற்கொண்டதை அவர்கள் கண்டறிந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவுப் பொருள்களை வாங்குவதில் அதிக சிக்கல்களை சந்தித்த உணவு உத்திரவாதமற்றவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி ஆய்வு நட்த்தப்பட்டது. அவர்களிடம் உணவுப் பொருள்களை வாங்கும் முறை, கடைகளுக்குச் செல்லும் முறை, பயணங்களை மேற்கொள்வது, உணவுக்கு செலவிடும் தொகையின் சராசரி போன்றவற்றை மதிப்பிட்டனர்.

நாடு முழுவதிலுமிருந்து பதிலளித்த 2,500 பேரில், உணவுப் உத்திரவாதமுடைய நபர்கள் ஒரு பயணத்திற்கு அதிக செலவு செய்தனர். ஆனால் உணவுப் உத்திரவாதமற்ற நபர்கள் குறைவான ஆதார வளங்களே இருப்பதால் அவர்கள் அதே அளவு செலவிடவில்லை.

source https://tamil.indianexpress.com/explained/how-the-pandemic-impacted-food-shopping-behaviour-322964/