வியாழன், 13 அக்டோபர், 2022

ஓசி பயண பேச்சு.. கண்டித்த மு.க. ஸ்டாலின்.. வருந்திய பொன்முடி.!

 12 10 2022

ஓசி பயண பேச்சு.. கண்டித்த மு.க. ஸ்டாலின்.. வருந்திய பொன்முடி.!
அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசுப் பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் மேற்கொள்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், ‘வியர்வைக்கு வெகுமதி’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இப்போ எல்லாம் வாயா, போயா என்று பேசவே பயமா இருக்கிறது. பாஜகவினருக்கு அரசியல் செய்ய எதுவும் இல்லை.

நான் பேசிய வார்த்தையை பிடித்துவைத்து அரசியல் செய்கின்றனர். மகளிர் பேருந்து பயணம் குறித்து பேசிய வார்த்தைக்காக முதலமைச்சரிடம் வருத்தம் தெரிவித்தேன்.
அவரும் என்னை அவவ்வாறு பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்றார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்வது குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
இந்த நிலையில் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ponmudi-expressed-regret-to-cm-mk-stalin-on-free-bus-controversy-speech-524602/

Related Posts: