செவ்வாய், 4 ஏப்ரல், 2023

மீண்டும் சீண்டும் சீனா; அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனப் பெயர், வரைபடம் வெளியீடு

4 4 2023

Arunachal pradesh
Arunachal pradesh

சீனாவின் சிவில் விவகாரத் துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் வகையில் 11 இடங்களுக்கு சீன, திபெத்திய மொழிகளில் பெயர் சூட்டி வரைபடம் வெளியிட்டுள்ளது. சீன, திபெத் மற்றும் பின்யின் எழுத்துக்களில் எழுதப்பட்டு அந்த வரைப்படம் வெளிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பகுதிகள் “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” பகுதியின் கீழ் வருவதாக சீனா குறிப்பிட்டுள்ளது. சீனா 3-வது முறையாக இவ்வாறு பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த செயல் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 இடங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் இரண்டு நிலப் பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளிட்டவைகள் இருப்பதாக கூறியுள்ளது. மேலும் இதற்கான நிர்வாக மாவட்டங்களையும் சீனா வகுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் குளோபல் டைம்ஸ் ஊடகம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா இவ்வாறு பெயர் பட்டியல் வெளியிடுவது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2017-ல் முதல் முறையாக 6 இடங்களை சொந்தம் கொண்டாடி பெயர் வெளியிட்டது. அடுத்து 2021-ல் 15 இடங்களுக்கு பெயரிட்டு வரைபடம் வெளியிட்டது.

இந்தநிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி சீனா பெயர் மாற்றும் நடவடிக்கையை இந்தியா நிராகரித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அப்போதும் இருந்தது எப்போதும் இருக்கும் என்று இந்தியா கூறியுள்ளது. மேலும் சீனாவின் நடவடிக்கைகள் உண்மையை மாற்றாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களின் பெயர் மாற்றம் செய்ய சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. இவ்வாறு செய்வதால் சீனா உண்மையை மறைக்க முடியாது என்றார்.

2017-ம் ஆண்டு தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு வந்த சென்ற பின் சீனா முதல் முறையாக பெயர் மாற்றும் நடவடிக்கையை செய்தது. திபெத்திய ஆன்மீக தலைவர் இந்தியா வருகையை சீனா கடுமையாக விமர்சித்தது.

1950 இல் இமயமலைப் பகுதியை சீனா இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து, தலாய் லாமா திபெத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் வழியாகத் தப்பி 1959 இல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

source https://tamil.indianexpress.com/india/china-releases-third-set-of-chinese-names-to-assert-its-claim-over-arunachal-pradesh-627637/