15 4 23
மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சி.ஆர்.பி.எஃப் கணினி வழித் தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட இதர பிராந்திய மொழிகளிலும் நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், CAPF எனப்படும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை ஆங்கிலம், ஹிந்தி தவிர பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் நடத்த மத்திய அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.
source https://news7tamil.live/the-chief-minister-asked-for-tamil-in-the-exam-the-union-minister-who-issued-the-notification.html