6 4 23
மகாத்மா காந்தியின் “உண்மையான அடையாளம் மற்றும் மரபு” பாஜக-ஆர்.எஸ்.எஸ்.ஸை எப்போதுமே தொந்தரவு செய்திருக்கிறது என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும் ஆசிரியருமான துஷார் காந்தி கூறினார்.
என்.சி.இ.ஆர்.டி.யின் பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டதைக் கண்டு தாம் ஆச்சரியப்படவில்லை ஆனால் இதுபோன்ற முயற்சிகள் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்படும் என்று கவலைப்படுவதாக அவர் கூறினார்.
புதன்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய துஷார் காந்தி, இந்த நீக்கங்கள் “சங் பரிவாரின் தவறான தகவல் பிரச்சாரத்தை” அதிக அளவில் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றார்.
சங்பரிவார்களின் வரலாற்றை அழிக்கும் இந்த முயற்சியால் நான் ஆச்சரியப்படவில்லை. இருக்கும் வரலாற்றை இழிவுபடுத்தவும், வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை அவர்கள் எப்பொழுதும் மறைக்கவில்லை.
இது இரண்டு நோக்கங்களுக்காக உதவுகிறது – அவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வரலாற்றின் ஒரு வசதியான பதிப்பை எழுத முடியும், மேலும் காந்தியை அவர்கள் பார்க்க விரும்பும் வண்ணத்தில் அவர்களால் காட்ட முடியும்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் உண்மையான அடையாளமும் மரபும் அவர்களை எப்போதும் தொந்தரவு செய்திருக்கிறது, என்று அவர் கூறினார்.
காந்தி, கொலையாளி நாதுராம் கோட்சே மற்றும் 1948 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் மீதான தடை பற்றிய முக்கிய பகுதிகளை 12 ஆம் வகுப்பு பொலிடிக்கல் சயின்ஸ் மற்றும் வரலாற்று CBSE பாடப்புத்தகங்களில் இருந்து NCERT நீக்கியுள்ளது. பல மாநில வாரியங்களும் NCERT பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.
இந்த நீக்கம் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவை பா.ஜ.க.வுக்கு இடையூறு விளைவிக்கும் வரலாற்றை ஒயிட்வாஷ் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
அவர்கள் அதிகாரத்துக்கு வந்தது முதல் வரலாற்றின் பதிவுகளை சிதைக்க முடிவு செய்யும் அளவிற்கு, காந்தியின் மரபால் பிஜேபி-ஆர்எஸ்எஸ் தொந்தரவுக்கு உள்ளானது என்று துஷார் காந்தி கூறுகிறார்.
அப்போது அவர்கள் உண்மையான தகவல்களை பெறமுடியாத எதிர்கால தலைமுறையைப் பெறுவார்கள்,
இதனால் அவர்களின் (ஆர்எஸ்எஸ்-பிஜேபி) தவறான தகவல் பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். ஆரம்பத்திலேயே மூளைச் சலவை செய்வதற்கு இது அவர்களின் பதிப்பு.
ஏற்கனவே புகுத்தப்பட்ட எண்ணங்களை தோற்கடிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவற்றை உருவாக்கும் மனங்களில் பொய்களை புகுத்துவதன் மூலம் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பொருந்தக்கூடிய மகாத்மாவின் பதிப்பு, சனாதன இந்து என்ற வரையறை இல்லாமல் வெறும் சனாதன இந்துவாக இருப்பவர், ராம ராஜ்ஜியம் என்ற வரையறை இல்லாமல் ராமராஜ்ஜியத்தை வழிபடுபவர் என்று வசதியாகக் காட்ட முடியும் என்று துஷார் கூறினார்.
அவர்கள் எப்போதும் பொருத்தமான காந்தியைத்தான் விரும்பினார்கள். அந்த காந்தியுடன் வாழ்வது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆர்.எஸ்.எஸ் எப்பொழுதும் போலித்தனமாகவே இருந்து வருகிறது, ஆர்எஸ்எஸ் எப்போதும் காரியங்களைச் செய்து, தப்பிக்கும் வழியைக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இரட்டைப் பேச்சு ஆச்சரியப்படுவதற்கில்லை, என்று துஷார் காந்தி மேலும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/mahatma-gandhi-assassination-rss-tushar-gandhi-changes-in-ncert-textbook-629736/