ஏக இறைவனின் திருப்பெயரால்
*திருவாரூர் தெற்கு மாவட்டம்*
*போதை விழிப்புணர்வு பேரணி* 10 5 23
திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மாவட்ட தலைவர் யாசர் அரஃபாத் தலைமையில் 10.5.23 புதன்கிழமை மாலை முத்துப்பேட்டையில் நடைபெற்றது. இப்பேரணி திமிலத்தெரு துவங்கி கடைவீதி கடந்து புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. இப்பேரணிக்கு மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், மாவட்ட துணைத்தலைவர் அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது வாசிம், ஹாஜா மைதீன், முகம்மது தவ்பீக் ஆகியோர் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். பேரணி புதியபேருந்து நிலையம் சேர்ந்ததும் மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உரையாற்றினார்.இறுதியாக மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் MISC நன்றியுரை நல்கினார்.இப்பேரணியில் முத்துப்பேட்டை நகர கிளை நிர்வாகிகள் , தெற்கு மாவட்ட பேச்சாளர்கள் , ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.