இந்தியாவில் சராசரி சம்பளம் ரூ.50,000-க்கும் குறைவாக உள்ளது என வோர்ல்ட் ஆப் ஸ்டாடிக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி, வோர்ல்ட் ஆப் ஸ்டாடிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகெங்கிலும் உள்ள 23 நாடுகளில் சராசரி மாதச் சம்பளம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது எனவும் உலகளவில் அதிக சம்பளம் வழங்கும் முதல் 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், யுஏஇ, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும் எனவும் தெரிவித்தது.
மேலும் துருக்கி, பிரேசில், அர்ஜெண்டினா, இந்தோனெசியா, கொலம்பியா, பங்களாதேஸ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியாவை விட சராசரி வருமானம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் இந்தியா 65-வது இடத்திலும், சீனா 44-வது இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 104-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் சராசரியாக ரூ.46,916, சீனாவில் 87,426 மற்றும் பாகிஸ்தானில் ரூ.11,872 சம்பளம் வழங்கப்படுகிறது. அதிக வருமானம் அளிக்கும் சுவிட்சர்லாந்தில் சராசரியாக ரூ.4.99 லட்சம் என தரவுகள் தெறிவிக்கின்றது.
முதல் 10 இடங்களில் உள்ள ஆசிய நாடுகள் கத்தார் மற்றும் யுஏஇ என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/what-is-the-average-monthly-income-in-india.html